வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர், யுவதிகளின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவித்து அவர்களைக் ராணுவத்தினர் கைது செய்து செல்கின்றனர். இவ்வாறு கைது செய்து
செல்லப்படும் தமிழ் இளைஞர், யுவதிகள் இரகசிய தனிப்பட்ட இடங்களுக்கு ராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். ஆனால் கைதுக்கு பின்னர் அவர்களை பெற்றோர்களோ
உறவினர்களோ தொடர்பு கொள்ளமுடியாமல் உள்ளது என வவுனியா செய்திகள் கிடைத்துள்ளன.
இவ்வாறு நவம்பர் 21 ஆம் திகதி குறைந்தது 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் 27 ஆம் திகதி செட்டிகுளம் வலயம்-0 முகாமிலிருந்து யுவதிகள் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் பெற்றோர்கள் அவர்களின் தொடர்புகள் அனைத்தையும் இழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதத்திலிருந்து பல விதமான திட்டமிடப்பட்ட தமிழ் இன அழிப்பு நடந்து வருவதால் இவ்வாறான கைதுகள் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஊட்டியுள்ளன. தடுப்பு முகாம்களில் கற்பழிப்புகள் நடந்ததற்கான தகுந்த சான்றுகள் கடந்த வாரம் மனிதாபிமான பணியாளர்களால் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் சட்டத்துக்கு புறம்பான கடத்தல் குறித்து தகவல் வந்துள்ள
| Comments |
|






















